ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாததை உறுதி செய்ய வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி ஆலை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு ஒப்புக்கொண்டிருக்கிறது.;

Update: 2024-01-04 21:46 GMT

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி ஆலை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு ஒப்புக்கொண்டிருக்கிறது. வருகிற 22-ந்தேதியே அந்த வழக்கு இறுதி விசாரணைக்கு வர வாய்ப்பிருக்கும் நிலையில், வழக்கு விசாரணையை வலுவான வாதங்களுடன் எதிர்கொள்ள தமிழக அரசு தயாராகவேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கை நடத்த மூத்த வழக்கறிஞர்களை கொண்ட குழுவை அரசு உடனடியாக அமைக்கவேண்டும். ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் வல்லுனர்களுடன் வழக்கறிஞர்கள் குழுவினர் கலந்துரையாடி தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யவேண்டும். மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாகவே இருக்கவேண்டுமே தவிர, எக்காரணத்தை கொண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படக்கூடாது. இதை சுப்ரீம் கோர்ட்டில் அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்