கஞ்சா விற்ற என்ஜினீயரிங் மாணவர் கைது

கஞ்சா விற்ற என்ஜினீயரிங் மாணவர் கைது;

Update: 2023-06-07 20:56 GMT

புதுக்கடை:

புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளி கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல புகார்கள் வந்தன. இந்த நிலையில் புதுக்கடை அருகே உள்ள அம்சி மற்றும் கீழ்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் புதுக்கடை சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் அந்த பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது கீழ்குளம் அருகே தண்டுமணி பகுதியில் உள்ள கல்குவாரி அருகில் ஒரு வாலிபர் இருசக்கர வாகனத்தில் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து இருசக்கர வாகனத்துடன் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த நபர் அம்சி அருகே உள்ள ஒரு பிலாவிளையை சேர்ந்த 19 வயதுடைய மாணவர் என்பதும், நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து 35 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து மாணவரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்