என்ஜினீயர்- 2 மேற்பார்வையாளர்கள் கைது

திருச்சுழி அரசு கல்லூரி கட்டிட பணியில் மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவத்தில், அந்த கட்டுமான பணி என்ஜினீயர், 2 மேற்பார்வையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-30 20:25 GMT

காரியாபட்டி,

திருச்சுழி அரசு கல்லூரி கட்டிட பணியில் மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவத்தில், அந்த கட்டுமான பணி என்ஜினீயர், 2 மேற்பார்வையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

2 சிறுவர்கள் பலி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா எம்.புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருடைய மகன் ஹரிஷ்குமார் (வயது 15), கருப்பசாமி மகன் ரவிசெல்வம் (17). இவர்கள் 2 பேரும் பள்ளிக்கூட மாணவர்கள். திருச்சுழி மேலேந்தல் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரி கட்டிடத்திற்கு நேற்று முன்தினம் வேலைக்கு சென்றபோது, மின்சாரம் தாக்கி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து நரிக்குடி போலீசார், கலைக்கல்லூரி காண்டிராக்டர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.

சிறுவர்கள் பலியான சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர்களது குடும்பத்தினர் உடல்களை வாங்க மறுத்து வந்தனர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு உடல்களை பெற்றுக்கொண்டனர்.

3 பேர் கைது

இந்தநிலையில் நரிக்குடி போலீசார் விசாரணை நடத்தி, அரசு கலைக்கல்லூரி கட்டிட பணிக்கான என்ஜினீயர் ஜெயசீலன் ராஜா (29), கட்டுமான பணி மேற்பார்வையாளர்கள் பால்சாமி (29), விஜயராகவன் (28) ஆகியோரை கைது செய்தனர். இவர்களை அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முத்து இசக்கி முன்பு ஆஜர்படுத்தினர். 3 பேரையும் வருகிற 12-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் விருதுநகர் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்