புதூரில் மயான இடம் ஆக்கிரமிப்பு

புதூரில் மயான இடம் ஆக்கிரமிப்பு

Update: 2022-10-12 12:13 GMT

குடிமங்கலம்

குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கொங்கல் நகரம் ஊராட்சி. கொங்கல் நகரம்புதூரை சேர்ந்த கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கொங்கல்நகரம் ஊராட்சி கொங்கல் நகரம் புதூர் அண்ணாநகரில் கடந்த 2000-ம் ஆண்டு ஆதிதிராவிட நலத் துறையின் சார்பில் இலவச வீட்டு மனைகள், மயானம், விளையாட்டு மைதானம் ஆகியவற்றிற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது அந்த இடங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி கம்பி வேலி அமைத்து பொதுமக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்