வீட்டுமனைகளை ஆக்கிரமித்து குளம் வெட்டி மண் விற்பனை

விழுப்புரம் அருகே வீட்டுமனைகளை ஆக்கிரமித்து குளம் வெட்டி மண் விற்பனை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்

Update: 2023-02-11 18:45 GMT

விழுப்புரம்

சென்னை நந்தனம் பகுதியைச்சேர்ந்த கோவிந்தராஜன் உள்ளிட்டோர் நேற்று விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம் அதனூர் கிராமத்தில் கடந்த 2007-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் வீட்டுமனை போட்டு விற்பனை செய்த இடத்தில் நாங்கள் மனை வாங்கி கிரையம் செய்துள்ளோம். அவ்வப்போது நேரில் வந்து எங்கள் வீட்டுமனைகளை பார்த்து சென்றோம். இந்நிலையில் எங்களுக்கு சொந்தமான மனைப்பகுதியில் அப்பகுதியை சேர்ந்த சிலர் மண்ணை வெட்டி எடுத்தும், டிராக்டரால் உழுதும் குளம்போல் வெட்டி எடுத்து மண்ணை விற்பனை செய்துள்ளனர். அதேபோல் அந்த இடத்தை ஆக்கிரமித்து சிறு கொட்டகை அமைத்தும் அப்பகுதியில் மீன் வளர்ப்புக்கான குளத்தை வெட்டியும் மீன் வளர்ப்பு செய்வதற்கான பணிகளை செய்துள்ளனர். இதுதொடர்பாக வீட்டுமனை வாங்கிய மனையின் நிர்வாகத்திடம் சொன்னபோது அவர்கள் போலீசில் புகார் தெரிவித்ததாக கூறினர். ஆனால் அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் வீட்டுமனையை ஆக்கிரமித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களது மனைகளை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்