ஈரோட்டில் காலி இடத்தில் கொட்டி கிடந்த மருந்து பாட்டில்கள்

ஈரோட்டில் காலி இடத்தில் கொட்டி கிடந்த மருந்து பாட்டில்கள்

Update: 2023-09-03 21:35 GMT

ஈரோடு சம்பத்நகர் வீட்டுவசதி வாரிய பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அங்குள்ள காலி இடத்தில் மருந்து பாட்டில்கள் கொட்டி கிடக்கின்றன. இதனால் சுகாதார கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே இந்த மருந்து பாட்டில்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "மருந்து பொருட்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இந்த விதிமுறையை கடைபிடிக்காமல் சிலர் மருந்து பாட்டில்களை குடியிருப்பு பகுதியில் கொண்டு வந்து கொட்டிவிட்டு சென்றுள்ளனர். எனவே மருந்து பாட்டில்களை போட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, மருந்து பாட்டில்களையும் அப்புறப்படுத்த வேண்டும்", என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்