கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

நாசரேத் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2022-09-10 16:03 GMT

நாசரேத்:

நாசரேத் மர்காஷியஸ் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மகளிர் திட்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் சார்பில் இளைஞர் திறன் திருவிழா மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் வீரபத்திரன் முன்னிலை வகித்தார். ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். மர்காஷியஸ் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) குளோரியம் அருள்ராஜ் மற்றும் மகளிர் திட்ட உதவியாளர் அருண் பிரசாத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் 18 வயது முதல் 45 வயது வரை ஆண், பெண் இருபாலரும் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெள்ளமடம் பஞ்சாயத்து தலைவி ஜாஸ்மின் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் ஏஞ்சல் விஜய் நிர்மலா, வட்டார மேலாளர் வேல்கனி, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார முதன்மை பயிற்சியாளர் எம்.கல்யாணி, மர்காஷியஸ் கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி அலுவலர்கள் ஜாய்ஸ் சோபினி, ஞானசுமதி, ஆரோக்கிய அமுதன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்