மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை; கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்

தேனியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

Update: 2023-08-02 21:00 GMT

தேனி மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவை சார்பில், தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் 14 தனியார் நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்தனர். முகாமில் 103 மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். அதில் 32 பேர் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கி பாராட்டினார். மேலும், 35 நபர்கள் 2-ம் நிலை தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர். முகாமில், 16 மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் தொடங்குவதற்கான கடனுதவி வழங்கப்பட்டது. இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மோகன்குமார், தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சேகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்