செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 30-ந்தேதி நடக்கிறது.

Update: 2023-09-28 09:19 GMT

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 30-ந்தேதி (சனிக்கிழமை) செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் வட்டத்தில் உள்ள வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, ஜி.எஸ்.டி சாலை, மேற்கு தாம்பரத்தில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்த உள்ளது.

இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபர்களை நேர்முக தேர்வினை நடத்தி தேர்வு செய்ய உள்ளார்கள். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம்வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ, ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள், பார்மசி/பாரா மெடிக்கல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் வருகிற 30-ந்தேதி காலை 8 மணி முதல் மாலை 3.மணி வரை தாம்பரம், வள்ளுவர் குருகுலம் மேல்நிலை பள்ளியில் நேரில் வருகை புரிந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுங்கள. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள அனுமதி முற்றிலும் இலவசம்.

மேலும், இந்த முகாமில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் மற்றும் வேலைதேடும் இளைஞர்கள் https://tnprivatejobs.tn.gov.in இணையதளம் மற்றும் https://forms.gle/9Uts84HsjpNydng97 என்ற கூகுல் லிங்கில் பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்