உரிய காலத்தில் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வலியுறுத்தல்

உரிய காலத்தில் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.;

Update: 2023-07-03 19:17 GMT

மீன்சுருட்டி:

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன், மீன்சுருட்டியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூட்டுறவுத்துறை நிர்வாகத்தில் இயங்கி வரும் ரேஷன் கடைகளுக்கு மாதந்தோறும் அத்தியாவசிய பொருட்களை நிர்வாகம் வழங்கி வருகிறது. அவ்வாறு வழங்குகிறபோது சரியான எடையில் பொருட்கள் வழங்கப்படுவதில்லை. குறிப்பாக 50 கிலோ மூட்டையில் சாக்கின் எடையும் சேர்த்து 50 கிலோ 650 கிராம் இருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு மூட்டையும் தலா 3 முதல் 5 கிலோ வரை எடை குறைவாக உள்ளது. இதனால் ரேஷன்கடை ஊழியர்கள் பல்வேறு சிக்கல்களையும், சிரமங்களையும் சந்தித்து வருகின்றார்கள். அதுமட்டுமின்றி பொருட்களை உரிய காலத்தில் வழங்க வேண்டும். காலம் தாழ்த்தி பொருட்களை கொடுப்பதால், அவை மக்களிடம் கிடைப்பதில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்பட்டு வருகின்றன. தமிழக அரசு இதில் தலையிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு உரிய காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல் எடை குறைவாக வழங்காமல் இருப்பதற்கு ஆவன செய்ய வேண்டும். மில்களில் இருந்து குடோன்களுக்கு பொருட்கள் வரும்போதும், கடைகளுக்கு வரும்போதும் ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்