சிவகாசி மாநகராட்சியின் அவசர கூட்டம்

சிவகாசி மாநகராட்சியின் அவசர கூட்டம் மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் நடைபெற்றது.

Update: 2023-05-02 19:30 GMT

சிவகாசி, 

சிவகாசி மாநகராட்சியின் அவசர கூட்டம் மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் நடைபெற்றது.

கூட்டு குடிநீர் திட்டம்

சிவகாசி மாநகராட்சியின் அவசர கூட்டம் நேற்று மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆணையாளர் சங்கரன், துணை மேயர் விக்னேஷ் பிரியா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 2018-ம் ஆண்டு ரூ.102 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்கான ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவு பெற்றுள்ள நிலையில் ஒப்பந்த காலத்தை வருகிற ஜூலை வரை நீட்டிக்க மாமன்றம் ஒப்புதல் பெறப்பட்டது.

திடக்கழிவு மேலாண்மை

மேலும் 48 வார்டுகளிலும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை 3 ஆண்டுகளுக்கு தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளவும், மாநகராட்சியில் உள்ள 60 தள்ளுவண்டி, 50 பேட்டரி வாகனங்கள், 15 இலகு ரக வாகனங்கள், 10 கனரக வாகனங்களை ஒப்பந்ததாரருக்கு வாடகை அடிப்படையில் வழங்கிட மன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் கவுன்சிலர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்