இமானுவேல் சேகரன் நினைவு தினம்

இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.;

Update: 2022-09-12 19:45 GMT

இட்டமொழி:

பரப்பாடி அருகே உள்ள பற்பநாதபுரம், ஏமன்குளம், இறைப்புவாரி பகுதிகளில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, இலங்குளம் பஞ்சாயத்து தலைவர் வி.இஸ்ரவேல் பிரபாகரன், ஒன்றிய தி.மு.க. அமைப்பாளர் அருள்ராஜ் டார்வின் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பரப்பாடி இலங்குளம், நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் ஆலோசனையின் பேரில் ஒன்றிய அவைத் தலைவர் செல்லத்துரை, மாவட்ட வர்த்தக அணி இணைச்செயலாளர் ஞானராஜ், ஒன்றிய பொருளாளர் வின்சென்ட், இளைஞரணி சேர்மப்பாண்டி, துணைச்செயலாளர் மனோகர் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, மரியாதை செலுத்தினர்.

மூலைக்கரைப்பட்டியில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் கட்சி சார்பில் சார்பில் இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நாங்குநேரி ஒன்றிய செயலாளர் தேவேந்திர சுதாகர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தேவா, பாலாஜி, சிவா, சதீஷ், பிரபு, விக்னேஷ், பாலமுருகன், மகேந்திரன், கொம்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்