இமானுவேல் சேகரன் நினைவு நாள்

கோவில்பட்டியில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் : உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. மரியாதை செலுத்தினார்

Update: 2022-09-11 17:46 GMT

கோவில்பட்டி:

இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் விஜயபாண்டியன், பஞ்சாயத்து யூனியன் துணைத்தலைவர் பழனிசாமி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

* கோவில்பட்டி எட்டையபுரம் ரோடு ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அவரது உருவப்படத்திற்கு நகர தி.மு.க. செயலாளர் கருணாநிதி தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாரதி, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், விவசாய தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சண்முகராஜ், மாவட்ட பிரதிநிதி மாரீஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்