நெற்பயிர்களை சேதப்படுத்திய யானைகள்
பாவூர்சத்திரம் அருகே வயலில் புகுந்து நெற்பயிர்களை யானைகள் சேதப்படுத்தின.;
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் திரவியநகரின் மேற்கே சத்திரப்பட்டை பகுதியில் பல வயல்களில் நெல் பயிரிப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் இருந்து வரும் யானைகள், வயலில் இறங்கி நெற்பயிர்களை சேதப்படுத்தி செல்கின்றன. மேலும் தென்னை, மா போன்ற மரங்களையும் சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகளுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்படுகிறது. எனவே வனவிலங்குகள் வயலுக்குள் புகாத வகையில் தடுப்பு வேலிகள் அமைத்து தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.