ராகி, தக்காளியை சேதப்படுத்திய யானைகள்
தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 50 யானைகள் முகாமிட்டு, ராகி, தக்காளி, பீன்ஸ், வெள்ளரிக்காய் ஆகியவற்றை சேதப்படுத்தி சென்றன.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 50 யானைகள் முகாமிட்டு, ராகி, தக்காளி, பீன்ஸ், வெள்ளரிக்காய் ஆகியவற்றை சேதப்படுத்தி சென்றன.
யானைகள் அட்டகாசம்
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்று அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 50 யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் திம்மசந்திரம், மேகலகவுண்டனூர், காடுலக்கசந்திரம், தின்னூர் கிராமங்களில் விவசாய நிலங்களில் புகுந்து ராகி அவரை, துவரை, தக்காளி, பீன்ஸ், வெள்ளரிக்காய் ஆகியவற்றை சேதப்படுத்தின.
விவசாயிகள் கவலை
தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளால் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டனர். அப்போது சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
யானைகளை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனஅவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.