தக்காளியை சேதப்படுத்திய யானைகள்

ராயக்கோட்டை அருகே தோட்டத்தில் புகுந்து தக்காளியை யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

Update: 2022-12-28 18:45 GMT

ராயக்கோட்டை

ராயக்கோட்டை அருகே தோட்டத்தில் புகுந்து தக்காளியை யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

யானைகள் அட்டகாசம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில் 20-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வெப்பாலம்பட்டி கிராமத்தில் உள்ள விளை நிலங்களுக்குள் யானைகள் புகுந்தன. பிறகு அந்த யானைகள் சண்முகம் உள்ளிட்ட விவசாயிகளின் தோட்டத்தில் பயிரிட்டிருந்த தக்காளி செடிகளை மிதித்தும், தின்றும் சேதப்படுத்தின. மேலும் அறுவடை செய்து விற்பனைக்காக வைத்திருந்த தக்காளி பெட்டிகளை கொட்டி கால்களால் மிதித்து சேதப்படுத்தி விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டன.

வனத்துறையினர் விரட்டினர்

இதனிடையே நேற்று காலை விவசாயிகள் தோட்டத்திற்கு சென்றபோது யானைகள் தோட்டத்தில் புகுந்து தக்காளியை சேதப்படுத்தியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரக அலுவலர் பார்த்தசாரதி தலைமையில் வனவர் நாராயணன் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்தனர்.பின்னர் அவர்கள் யானைகளை பட்டாசுகள் வெடித்தும், தீப்பந்தங்கள் காட்டியும் அடர்ந்த காட்டிற்குள் விரட்டினர். தோட்டத்தில் புகுந்து யானைகள் தக்காளியை சேதப்படுத்தி அட்டகாசம் செய்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்