எப்ரி வனப்பகுதியில் 9 யானைகள் முகாம்

வேப்பனப்பள்ளி அருகே எப்ரி வனப்பகுதியில் 9 யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.;

Update: 2022-11-20 18:45 GMT

வேப்பனப்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஏக்கல்நத்தம் வனப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக 9 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த காட்டு யானைகள் அவ்வப்போது வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களில் பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின.

இதையடுத்து யானைகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டினர். இந்த நிலையில் நேற்று மாலை 9 காட்டு யானைகளும் தமிழக எல்லையான எப்ரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இதனால் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து யானைகளை தீவிரமாக கண்காணித்து வேறு வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் யானைகள் நடமாட்டத்தால் சுற்றுவட்டார கிராம விவசாயிகள் மற்றும் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் யாரும் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்