ஏரியில் குளித்து கும்மாளம் அடித்த யானைகள்

தேன்கனிக்கோட்டை அருகே ஏரியில் குளித்து காட்டு யானைகள் கும்மாளம் அடித்தன.;

Update: 2022-06-26 16:53 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே ஏரியில் குளித்து காட்டு யானைகள் கும்மாளம் அடித்தன.

காட்டு யானைகள்

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இந்த 3 காட்டுயானைகள் அகலக்கோட்டை கிராமத்தில் சுற்றித்திரிகின்றன. இந்த அங்குள்ள விவசாய பயிர்கள் மற்றும் நர்சரி பண்ணை தோட்டங்களில் புகுந்து சேதப்படுத்திவருகின்றன.

இந்தநிலையில் நேற்று அகலக்கோட்டை கிராமத்திற்குள் நுழைந்த 3 காட்டு யானைகள் அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின. பின்னர் சேஷய்யன் ஏரியில் யானைகள் குளித்து கும்மாளம் அடித்தன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்குதகவல் தெரிவித்தனர்.

விரட்டியடிப்பு

இதையடுத்து தளி வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் காட்டு யானைகளை பட்டாசுகள் வெடித்து ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். யானைகள் கிராமத்திற்குள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

காட்டு யானைகள் அவ்வப்போது கிராமத்துக்குள் நுழைவதால் கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். விவசாய தோட்டங்களில் கவனமுடன் பணியாற்ற வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்