சாராய ஊறலை குடித்துவிட்டு அட்டகாசம் செய்த யானை: பொதுமக்கள் அச்சம் - பரபரப்பு சம்பவம்

வேலூர் அருகே யானை ஒன்று சாராய ஊறலை குடித்துவிட்டு அட்டகாசம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2022-06-11 10:57 GMT

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் உள்ள கோட்டைச்சேரி பகுதியில் ஒற்றைக் காட்டுயானை சாராய ஊறலை குடித்துவிட்டு அட்டகாசம் செய்ததாக பொது மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது.

இதையடுத்து பேரனாம்பட்டு மலைப்பகுதிகளில் அதிரடி சோதனை நடத்திய காவல் துறையினர், 4 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள், அடுப்பு மற்றும் மூலப்பொருட்களை அழித்தனர்.

மேலும், சாராயம்காய்ச்சிவிட்டு தப்பி ஓடிய ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்