ஆசனூர் அருகே சாலையில் உலா வரும் யானை

ஆசனூர் அருகே சாலையில் உலா வரும் யானை

Update: 2023-05-07 22:05 GMT

தாளவாடி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது சத்தியமங்கலத்தில் இருந்து மைசூரு செல்லும் சாலையை கடந்து செல்கின்றன. குறிப்பாக கடந்த சிலநாட்களாக யானைகள் அடிக்கடி சாலையில் சுற்றி திரிவதும், வாகன ஓட்டிகளை விரட்டுவது வாடிக்கையாகி வருகிறது.

இந்த நிலையில் ஆசனூரில் இருந்து திம்பம் செல்லும் சாலையில் யானை ஒன்று வந்து நின்று கொண்டது. பின்னர் யானை அந்த சாலையில் உலா வந்தது. யானையை கண்டதும் வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை சிறிது தூரத்திலேயே நிறுத்திவிட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் வனப்பகுதிக்குள் யானை சென்றது. வனவிலங்குகளை கண்டால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்