பாப்பாரப்பட்டி அருகேசாலையை கடந்து சென்ற 2 யானைகள்வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு
பாப்பாரப்பட்டி:
பாப்பாரபட்டி அருகே சாலையை கடந்து சென்ற 2 யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன.
யானைகள்
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் உள்ளது. இந்த யானைகள் அவ்வப்போது அங்குள்ள சாலையை கடந்து சென்றும், விவசாய நிலங்களில் புகுந்தும் வருகின்றன.
இந்த நிலையில் நேற்று காட்டு 2 யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி பாப்பாரப்பட்டி- பாலக்கோடு சாலையை கடந்து சென்றன.
விரட்டியடிப்பு
இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி யானைகள் சென்றபின் வாகனத்தில் மீண்டும் சென்றனர்.
இது பற்றி தகவல் அறிந்து பாலக்கோடு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிக்கிலி வனப்பகுதியை நோக்கி யானைகளை விரட்டினர். இதையடுத்து அந்த 2 யானைகளும் பிக்கிலி வன பகுதிக்குள் சென்று விட்டன.