மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடக்கம்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடங்கியது.

Update: 2023-07-04 19:00 GMT

அரியலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஆயத்த பணிக்காக, மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு எந்திரம், வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்களுக்கான முதற்கட்ட சரிபார்க்கும் பணியானது நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், உரிய பாதுகாப்போடு, அரியலூர் மாவட்ட மின்னணு எந்திரம் சேமிப்பு கிடங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இப்பணியின்போது, அரியலூர் மாவட்டத்தில் இருப்பு வைக்கப்பட்ட 1,440 வாக்குப்பதிவு எந்திரம், 859 கட்டுப்பாட்டு எந்திரம், 926 வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரம் ஆகியவற்றை சரிபார்க்கும் பணியை பெங்களுரு பாரத் மின்னணு லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், தாசில்தார் (தேர்தல்) வேல்முருகன், அரியலூர் தாசில்தார் கண்ணன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்