மின்வாரிய ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

கறம்பக்குடியில் மின்வாரிய ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-03-14 18:59 GMT

அரியலூர் கண்ணுச்சாமி தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 50). இவர் கறம்பக்குடி மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். கறம்பக்குடி அக்ரஹாரம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தனது மனைவி மற்றும் மகன், மகளுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் ரவிச்சந்திரனின் மனைவி மற்றும் குழந்தைகள் கடந்த மாதம் அரியலூருக்கு சென்று விட்டனர். இதனால் ரவிச்சந்திரன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்தநிலையில் இவருக்கு நீண்டகாலமாக குதிகால் மற்றும் வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் வலி தீராததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ரவிச்சந்திரன் தனது வீட்டின் ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்