அம்பத்தூரில் ரூ.10 லட்சம் மதிப்பில் மின்சாரம் திருட்டு; ரூ.99 ஆயிரம் செலுத்தியதால் வழக்கு பதியவில்லை
அம்பத்தூரில் கடந்த 11-ந்தேதி சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சீபுரம் அமலாக்க அதிகாரிகள் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர்.;
சென்னை:
சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்துக்குட்பட்ட அம்பத்தூரில் கடந்த 11-ந்தேதி சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சீபுரம் அமலாக்க அதிகாரிகள் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதில் 14 மின்சார திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இழப்பீட்டு தொகையாக மின்சார நுகர்வோருக்கு ரூ.10 லட்சத்து 30 ஆயிரத்து 539 விதிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட மின்சார நுகர்வோர்கள், மின்சாரம் திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகை ரூ.99 ஆயிரம் செலுத்தியதால் அவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகார் ஏதும் செய்யப்படவில்லை.
மின்சார திருட்டுகள் தொடர்பாக செயற்பொறியாளரின் 9445857591 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.