தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

Update: 2024-07-15 15:55 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் 4.83% மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;

* வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

* 0 முதல் 400 யூனிட் பயன்பாட்டுக்கான மின் கட்டணம் ரூ.4.60ல் இருந்து ரூ.4.80ஆக உயர்வு.

* 401 முதல் 500 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ரூ.6.15ல் இருந்து ரூ.6.45ஆக உயர்வு.

* 501 முதல் 600 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ரூ.8.15ல் இருந்து ரூ.8.55ஆக உயர்வு.

* 601 முதல் 800 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ரூ.9.20ல் இருந்து ரூ.9.65ஆக உயர்வு.

* 801 முதல் 1000 யூனிட் பயன்பாட்டுக்கான கட்டணம் ரூ.10.20ல் இருந்து ரூ.10.70ஆக உயர்வு.

* 1000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு இனி ரூ.11.80 வசூலிக்கப்படும்.

* 50 யூனிட்டுக்கு மேல் வனிக பயன்பாட்டுக்கான மின் கட்டணம் ரூ.9.70ல் இருந்து ரூ.10.15 ஆக உயர்வு.

* அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.8.15ல் இருந்து ரூ.8.55 ஆக உயர்வு.

* குடிசை, குறு நிறுவன மின் கட்டணம் 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.95 ஆக உயர்வு

* விசைத்தறிகளுக்கு 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.7.65ல் இருந்து ரூ.8 ஆக உயர்வு.

* இந்த மின்கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்