ஓமலூர் அருகே மழைக்கு சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்கள்-ஒருவாரம் ஆகியும் சரிசெய்யப்படாததால் மக்கள் அவதி

ஓமலூர் அருகே மழைக்கு சாய்ந்த மின்கம்பங்கள் ஒரு வாரம் ஆகியும் சரிசெய்யப்படவில்லை. இதனால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.;

Update: 2023-06-08 20:33 GMT

ஓமலூர்:

சாய்ந்த மின்கம்பங்கள்

ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது ஓமலூர் அருகே தாசன் காட்டுவளவு பகுதியில் கோவிந்தராஜ் உள்ளிட்ட 3 விவசாயிகளின் விவசாய நிலத்தில் இருந்த 3 மின்கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்து விழுந்தன.

இதுபற்றி மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒரு வாரம் ஆகியும் அந்த மின்கம்பங்கள் சரிசெய்யப்படவில்லை. இதனால் சுமார் 50 ஏக்கர் விவசாய பயிர்கள் தண்ணீர் இல்லாமல் வாடிய நிலையில் காணப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளிலும் மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

மக்கள் அவதி

இதுபற்றி அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், மழைக்கு மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து ஒரு வாரம் ஆகிறது. மின்சாரம் இல்லாமல் கடும் அவதிப்படுகிறோம். மின்வாரிய அதிகாரிகள், மின்கம்பங்களை சரிசெய்யாமல் ஏன் காலம் தாழ்த்துகிறார்கள் என்பது தெரியவில்லை. எனவே மின்கம்பங்களை உடனே சரிசெய்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்