மழையின்போது சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டு

மழையின்போது சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2023-05-10 23:00 IST

நெமிலி பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது மரங்கள், மின்கம்பங்கள் சேதமடைந்தன. நெமிலி புன்னை கிராமத்தில் விவசாய நிலத்தில் இருந்த 7 மின்கம்பங்கள் தொடர்ச்சியாக அடியோடு சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் கடந்த ஒருமாதமாக மின்சேவை இல்லாமல் 20-க்கும் மேற்பட்ட ஏக்கர் அளவில் நெல்நடவு செய்து அவற்றிற்கு நீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.

சாய்ந்த மின்கம்பங்கள் மாற்றியமைக்க படாமலும், நெற்பயிரின் மீது அறுந்துவிழுந்துள்ள மின்ஒயர்கள் அகற்றபடாமலும் உள்ளது. இது சம்பந்தமாக அப்பகுதி விவசாயிகள் மின்சார துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மின்கம்பங்களை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்