ஆலத்தூர், புதுப்பட்டு, மணலூர்பேட்டை பகுதியில் நாளை மின்நிறுத்தம்
ஆலத்தூர், புதுப்பட்டு, மணலூர்பேட்டை பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.;
சங்கராபுரம்,
ஆலத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான ஆலத்தூர், அழகாபுரம், திருக்கனங்கூர், பிச்சநத்தம், மாதவச்சேரி, பால்ராம்பட்டு, அரியபெருமானூர், ரங்கநாதபுரம், வாணியந்தல், அகரகோட்டாலம், மூரார்பாளையம், பரமநத்தம், கல்லேரிகுப்பம், பழையசிறுவங்கூர், சித்தேரிப்பட்டு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
இதேபோன்று புதுப்பட்டு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட புதுப்பட்டு, ரங்கப்பனூர், புத்திராம்பட்டு, மல்லாபுரம், பாவளம், , ராவத்தநல்லூர், பிரம்மகுண்டம், லக்கிநாயக்கன்பட்டி, புளியங்கோட்டை, மூலக்காடு, கொடியனூர், பவுஞ்சிப்பட்டு, ஆனைமடுவு, சேராப்பட்டு, இன்னாடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரைக்கும் மின்சாரம் வினியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.
மணலூர்பேட்டை அருகே தேவரடியார்குப்பத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான மணலூர்பேட்டை, சித்தப்பட்டினம், செல்லங்குப்பம், சாங்கியம், தேவரடியார்குப்பம், அத்தியந்தல், ஜம்பை, பள்ளிச்சந்தல், காங்கேயனூர், முருக்கம்பாடி, கொங்கணாமூர், கழுமரம், சொரையப்பட்டு, விளந்தை, சித்தாமூர், கூவனூர், அருதங்குடி, மிளாரிப்பட்டு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவல் திருக்கோவிலூர் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.