மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு;

Update: 2023-04-13 19:44 GMT

கபிஸ்தலம் அருகே வயலில் மோட்டாரை பழுது பார்த்த போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழந்தார்.

எலக்ட்ரீசியன்

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள துரும்பூர் ஊராட்சி, பாதிரிமேடு கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது45). எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.இந்த நிலையில் நேற்று காலை திருவைக்காவூர் ஊராட்சி அதியமான் நல்லூர் கிராமத்தில் ஒருவருக்கு சொந்தமான வயலில் மின் மோட்டார் பழுதை சரி செய்யும் பணியில் சத்தியமூர்த்தி ஈடுபட்டு கொண்டிருந்தார்.

மின்சாரம் தாக்கி சாவு

அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் சத்தியமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சிறப்பு இன்ஸ்பெக்டர்கள் ராமதாஸ், அன்பழகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சத்தியமூர்த்தி உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்