எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை

பாளையங்கோட்டையில் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார்.;

Update: 2022-06-18 20:01 GMT

நெல்லை:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தேவனூர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 25). இவர் ஐ.டி.ஐ. படித்துவிட்டு பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவர் பாளையங்கோட்டை பெருமாள்புரம் ரெட்டியார்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.

இந்த நிலையில் மணிகண்டன் நேற்று அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் பாலமுருகன், பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மணிகண்டன் உடலை பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்