உயர் அழுத்த புதிய மின் மாற்றிகள்
கெலமங்கலம் அருகே 3 இடங்களில் உயர் அழுத்த புதிய மின் மாற்றிகளை ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் ஒன்றியத்தில், கவுதாளம், ரத்தினகிரி, காடுலக்கசந்திரம் ஆகிய பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின் விளக்குகள் மற்றும் மின்மோட்டார்கள் சரியாக இயங்கவில்லை. இதனால் இந்த பகுதியில் உயர் அழுத்த மின் மாற்றிகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கவுதாளம், ரத்தினகிரி, காடுலக்கசந்திரம் ஆகிய இடங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டது. இதை ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் கேசவமூர்த்தி, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சளா சகாயமேரி, செயற்பொறியாளர் கிருபானந்தன், உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணி, உதவி பொறியாளர்கள் பரஸ்கரன், தேன்மொழி, ஒன்றியக்குழு உறுப்பினர் ரமேஷ் மற்றும் மின் வாரிய ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.