மின்ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின்ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-12-05 18:54 GMT

1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கி பேசி முடிக்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு குளித்தலை கோட்ட செயலாளர் நெடுமாறன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மின் பொறியாளர் அமைப்பின் மாநில துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில செயலாளர் தனபால் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் கிளை பொருளாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்