6-ந் தேதி மின்நிறுத்தம்

நீலக்குடி பகுதியில் 6-ந் தேதி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது;

Update: 2023-05-03 19:00 GMT

திருவாரூர், 

திருவாரூர் மின்வாாிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

நீலக்குடி துணைமின்நிலையத்தில் வருகிற 6-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதனால் இந்த துணைமின்நிலைத்தில் இருந்து மின்வினியோகம் பெறும், நன்னிலம் துணை மின்நிலையம் மற்றும் நீலக்குடி, வைப்பூர், நடப்பூர், வாழ்குடி, கீழதஞ்சாவூர், பிபல்லாளி, செல்வபுரம், மூலங்குடி, பழையவலம், திருவாதிரை மங்கலம், காரையூர், திருப்பள்ளிமுக்கூடல், ராராந்திமங்கலம், சுரக்குடி, கங்களாஞ்சேரி, வண்டம்பாளை, சேந்தமங்கலம், பெரும்புகளூர், திருபயத்தங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 6-ந் தேதி காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை மின்வினியோம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்