மின்கம்பியை மிதித்த தொழிலாளி சாவு

மெலட்டூர் அருகே வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தொழிலாளி உயிரிழந்தார். மற்றொருவர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார்.

Update: 2023-06-09 21:41 GMT

மெலட்டூர்;

மெலட்டூர் அருகே வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தொழிலாளி உயிரிழந்தார். மற்றொருவர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார்.

மின்சாரம் தாக்கி சாவு

தஞ்சை மகர்நோன்பு தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு சொந்தமான வயல் மெலட்டூர் அருகே உள்ள ஆத்தூர் பகுதியில் உள்ளது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, ஆத்தூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் முருகேசன்(வயது33). அதே ஊரை சேர்ந்தவர் அம்மாசி(55). சம்பவத்தன்று சுரேசுக்கு சொந்தமான வயலில் வேலை செய்ய முருகேசன், அம்மாசி மற்றும் நில உரிமையாளர் சுரேஷ் , ஆகியோர் வயல் வரப்பில் ஒருவர் பின் ஒருவராக நடந்து சென்றனர். அப்போது வயல் பம்பு செட்டிற்கு அருகே சென்றபோது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக முருகேசன் மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பின்புறம் சென்ற சுரேஷ் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

சிகிச்சை

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அம்மாசி உடனே கீழே கிடந்த கட்டையை எடுத்து மின்கம்பியைதூக்கி பிடித்து சுரேசை காப்பாற்றினார். உடனே அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு சென்று சுரேசை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து தகவல் அறிந்த மெலட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முருகேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்