சாய்ந்த நிலையில் மின்கம்பம்
மயிலாடுதுறை அருகே சாய்ந்த நிலையில் மின்கம்பம் சீரமைக்க வலியுறுத்தல்;
மயிலாடுதுறை அருகே நீடூர் கங்கணம்புத்தூர் ஊராட்சியில் நீடூர் மின் வாரிய அலுவலகம் பின்புறம் உள்ள ஏனாதிமங்கலம் சாலையில் ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும் அந்த மின்கம்பம் மரத்தின் மீது சாய்ந்தும் அதன் மீது செடி கொடிகள் படர்ந்தும் காணப்படுகின்றன. மரத்தின் மீது சாய்ந்து விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தை உடனே சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.