மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்
கும்பகோணத்தில், நாளை மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.;
திருவிடைமருதூர், மார்ச்.8-
கும்பகோணம் கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தஞ்சாவூர் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் கும்பகோணம் நகரம், புறநகர், பாபநாசம் நகரம், புறநகர், கபிஸ்தலம், அய்யம்பேட்டை, திருக்கருகாவூர், கணபதிஅக்ரஹாரம், பட்டீஸ்வரம், சுவாமிமலை, திருப்புறம்பியம் உள்ளிட்டப் பிரிவு அலுவலகம் பகுதியினைச் சேர்ந்த மின் நுகர்வோர் நேரில் வந்து கலந்து கொண்டு மின் வினியோகம் தொடர்பான தங்களது குறைகளை மனுக்களாக அளிக்கலாம். இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.