2-வது நாளாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள்

2-வது நாளாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் நடைபெற்றன.;

Update: 2022-11-13 18:30 GMT

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 1.1.2023-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெற உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான முதற்கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளாக நேற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் நடைபெற்றன. இந்த முகாமில் 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கு படிவம் 6-ம் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர் நீக்கம் திருத்தத்திற்கு படிவம் 7-ம், திருத்தம் மேற்கொள்ள படிவம் 8-ம், இடமாற்றம் திருத்தத்திற்கு படிவம் 8 ஏ-ம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான திருத்தத்திற்கு படிவம் 6 ஏ-ம் பயன்படுத்தி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்தனர்.

17 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்திட விண்ணப்பங்களை அளித்து முன்பதிவு செய்தனர். மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்து கொள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் 2-ம் கட்டமாக வருகிற 26, 27-ந்தேதிகளில் நடைபெறவுள்ளது. மேலும் வாக்காளர்கள் சிறப்பு சுருக்க திருத்த முகாமிற்கான விண்ணப்பங்களை தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமோ அல்லது வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலத்திலோ பெற்றும் பூர்த்தி செய்து அளிக்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்