144 பகுதி சபை உறுப்பினர்கள் தேர்வு

குடியாத்தம் நகராட்சியில் 144 பகுதி சபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Update: 2022-11-01 17:56 GMT

குடியாத்தம் நகராட்சியில் 144 பகுதி சபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நகரமன்ற கூட்டம்

குடியாத்தம் நகரமன்ற அவசர கூட்டம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் பி.சிசில்தாமஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் கிராமங்களை போன்று நகரங்களில் பகுதி சபை கூட்டங்களை நடத்த வார்டுகளில் குழுக்களை நியமித்து, செயலாளர்கள், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும், இந்த குழுக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 144 பேர் நியமனம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் செம்மையாக நடைபெற பகுதி சபை கூட்டங்கள் நடத்த உத்தரவிட்ட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமலுவிஜயன் எம்.எல்.ஏ. பேசுகையில் நகரமன்ற உறுப்பினர்கள் இந்த குழுக்களுடன் இணைந்து மக்களின் அடிப்படை பிரச்சினைகளை கண்டறிந்து உடனடியாக நகர மன்ற தலைவர், அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கவனத்திற்கு கொண்டு வந்து அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இந்த ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து நகராட்சியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த ரூ.55 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து அடிப்படை வசதிகள் மேம்படுத்த குடியாத்தம் நகராட்சிக்கு நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து சபை கூட்டங்கள் நடத்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினருக்கு நியமனச் சான்றிதழை எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் ஆகியோர் வழங்கினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்