பஸ் மோதி மூதாட்டி பலி

கொளத்தூர் அருகே பஸ் மோதி மூதாட்டி பலியானார்.;

Update: 2023-01-31 19:52 GMT

மேட்டூர் 

கொளத்தூர் அருகே உள்ள சின்ன மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் குஞ்சம்மாள் (வயது 80). இவர் கடந்த 29-ந் தேதி மேட்டூர் பஸ் நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ் நிலையத்திற்கு உள்ளே வந்த ஒரு அரசு பஸ் எதிர்பாராதவிதமாக குஞ்சம்மாள் மீது மோதியது.

இதில் இவரது காலில் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அந்த மூதாட்டியை மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்