விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
திருக்கோவிலூர் அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை;
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள துலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் மனைவி துளசி என்கிற ஆண்டாள்(வயது 65). சம்பவத்தன்று விஷம்குடித்து மயங்கி விழுந்த இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆண்டாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆண்டாளின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.