விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

திருக்கோவிலூர் அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-29 18:45 GMT

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே எரவலம் கச்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி மனைவி ஆராயி (வயது 75). இவருக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமும் முடிந்து விட்டது. இந்த நிலையில் வீட்டிலிருந்த ஆராயி சம்பவத்தன்று விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆராயி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆராயி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்