அரசு பஸ் மோதி முதியவர் பலி

குன்னம் அருகே அரசு பஸ் மோதி முதியவர் பலியானார். விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2023-07-29 18:03 GMT

விபத்து

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள நன்னை கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு(வயது 84). இவர் நேற்று காலை தனது மனைவி லட்சுமியுடன் காட்டில் இருந்து மூங்கில் குச்சி வெட்டி எடுத்து வருவதற்காக நன்னை கிராமத்தில் இருந்து லெப்பைக்குடிக்காடு செல்லும் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அரியலூரில் இருந்து வேப்பூர் வழியாக தொழுதூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அரசு பஸ் நன்னை ஆனந்தாயி கோவில் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த தங்கராசு மீது பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த தங்கராசு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து குன்னம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

கைது

தகவலின்பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சுமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்கராசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த இடத்தில் அப்பகுதி மக்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தங்கராசு மகன் துரைராஜ் கொடுத்த புகாரின் பேரில்அரசு பஸ் டிரைவரான பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(54) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்