அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி
வாலாஜா அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியானார்.;
வாலாஜா அடுத்த சென்னை சமுத்திரம் கிராம பெரிய தெருவில் வசித்து வந்தவர் மணி (வயது 67). இவர் நேற்று வாலாஜாபேட்டை அணைக்கட்டு ரோட்டில் வாலாஜாவை நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார் அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.
இது குறித்து வாலாஜா போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைத்தனர்.