விஷம் குடித்து முதியவர் தற்கொலை

விஷம் குடித்து முதியவர் தற்கொலை

Update: 2023-05-07 19:51 GMT

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள புதுச்சத்திரம் புதுக்குடியான தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது60). இவர் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வயிற்றுவலி அதிகமானதால் சேகர் வீட்டில் இருந்த எலி மருந்து(விஷம்) குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பகத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் இறந்தார். இதுகுறித்து சேகர் மனைவி பாமா (50) திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்ே்பரில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்