விஷம் குடித்து முதியவர் தற்கொலை

விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-11 19:17 GMT

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே குணமங்கலம் காலனி தெருவை சேர்ந்தவர் ஜோதிவேல் (வயது 75), கூலி தொழிலாளி. இவர் தனது மகனுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மனவேதனையில் இருந்து வந்த ஜோதிவேல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனைக்கண்ட உறவினர்கள் ஜோதிவேலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜோதிவேல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்