முதியவரை தாக்கி செல்போன் பறிப்பு

முதியவரை தாக்கி செல்போன் பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

Update: 2023-01-31 18:50 GMT

அரியலூர் மாவட்டம் திருமணப்பாடி பகுதியை சோ்ந்தவர் சார்லி (வயது 73). இவர் திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரம் சா்வீஸ் ரோடு அருகே நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்மநபர்கள் சார்லியை தாக்கி அவர் வைத்திருந்த செல்போன், மணிபர்ஸ் உள்ளிட்டவற்றை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்