சிறுமிக்கு பாலியல் தொல்லை-போக்சோ சட்டத்தில் முதியவர் கைது

கடையம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-07 18:45 GMT

ஆலங்குளம்:

கடையம் அருகேயுள்ள ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 10 வயது சிறுமி காட்டுபகுதியில் நின்றாள். அப்போது கல்யாணிபுரத்தைச் சேர்ந்த கணேசன் (வயது 67) என்பவர் அந்த பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அவர் அந்த சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாள். இதையடுத்து அவளது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவரை ஆலங்குளம் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்