சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-22 18:59 GMT

கரூர் திருமாநிலையூர் பகுதியில் காய்கறி கடை நடத்தி வருபவர் மேகநாதன் (வயது 63). இவர் 14 வயது சிறுமியை மிரட்டி கடந்த 6 மாதமாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில், கரூர் அனைத்து மகளிர் போலீசார் மேகநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்