நகைக்காக வயதான தம்பதி கொலை: கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

நகைக்காக வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க வந்தவர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருப்பார்களா? என்ற கோணத்தில் கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-02-20 09:17 GMT

கொலை

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில் உள்ள முந்திரிதோப்பு பகுதியில் வசித்து வந்தவர் சகாதேவன் (வயது 92). தென்னக ரெயில்வேயில் சென்னை சென்டிரல் ரெயில் நிலைய பிரிவில் கேங்மேனாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

இந்த நிலையில் ஜானகியின் கழுத்து, காது, மூக்கு போன்றவற்றை அறுத்து அவர் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி, தங்கச்சங்கலி போன்றவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. சகாதேவனும் கொலை செய்யப்பட்டிருந்தார்.

கொலையாளிகள் பற்றிய எந்தவித தடயமும் இதுவரை சிக்கவில்லை. இதற்கிடையில் கொலை சம்பவம் நடந்த இடத்தில் காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. பகலவன், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகள்

ஆள் நடமாட்டம் இல்லாத இந்த பகுதிக்கு அருகில் 200 மீட்டர் தூரத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க வந்தவர்கள் யாரேனும் இந்த செயலில் ஈடுபட்டார்களா? என கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராவிலும் சந்தேகமான முறையில் மர்ம நபர்கள் யாருடைய உருவமாவது அதில் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்ய தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

அதன் அடிப்படையில் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் தலைமையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், மாமல்லபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட போலீசார் கொண்ட 4 தனிப்படை போலீசார், குற்றவாளிகள் முகம் பதிவாகி உள்ளதா? என கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்