இணையதளத்தில் இ.கே.ஒய்.சி. பதிவேற்றம் செய்ய வேண்டும்

இணையதளத்தில் இ.கே.ஒய்.சி. பதிவேற்றம் செய்ய வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-11-12 18:45 GMT

இணையதளத்தில் இ.கே.ஒய்.சி. பதிவேற்றம் செய்ய வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டுக்்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 4 மாதங்களுக்கு ஒருமுறை 3 தவணையாக ரூ.2000 வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் இந்த தொகை நேரடியாக வரவு வைக்கப்படுகின்றது. இதில், பயன்பெறும் விவசாயிகள் பி.எம்.கிசான் இணையதளத்தில் அல்லது மொபைல் செயலியில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மூலமாக இ.கே.ஒய்.சி. செய்வது அவசியம்.

விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர்கள் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களை அணுகி ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் மூலமாக உடனடியாக இ.கே.ஒய்.சி. பதிவேற்றம் செய்து பயன் பெற வேண்டும். இந்த சேவைக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும். மாவட்டத்தில் தகுதியுள்ள 30 ஆயிரத்து 690 விவசாயிகளுக்கு இ.கே.ஒய்.சி. பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கடந்த அக்டோபர் மாதத்தில் விடுவித்த 12 தவணைத்தொகை அவர்களுக்கு கிடைக்கவில்லை. எனவே, தகுதியுள்ள விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைத்து இ.கே.ஒய்.சி. பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும்.. இதற்காக கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்